சிங்கையில் குடிப்போதையில்  போலீசாரை தாக்கிய தமிழர் கைது! -( Video) 

சிங்கப்பூர்,ஜூன்,3- குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, போலீஸ் அதிகாரியை தாக்கியது தொடர்பாக தமிழர் முருகேசன் ரகுபதி ராஜாவை (வயது 25) போலீசார் கைது செய்தனர்.

சிங்கப்பூரின் மத்திய பிராந்தியத்தில் உள்ள எவர்டனில் வசித்து வருபவர் முருகேசன் ரகுபதி ராஜா. இவர் எவர்டனில் உள்ள ஒரு பூங்காவில் மது போதையில் இருந்துள்ளார்.

அங்கிருந்தவர்களுக்கு தொந்தரவு அளித்ததோடு, மர இருக்கையில் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியுள்ளார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளித்ததன்பேரில் விரைந்து வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர் .

Police deployed taser on this guy when he advanced towards the police officer with a punch. Most probably he is tipsy or half drunk. Last 5 seconds you can see the officer telling the lady officer “ taser gun really effective huh”. Thank you police officers for your first responder service to our nation. Location: Everton ParkVideo received by WhatsApp

Posted by ROADS.sg on Sunday, 9 June 2019

அப்போது அவர் ஒரு போலீஸ் அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்பியதோடு அவரது இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்ததுயடுத்து போலீசார் மின்சார துப்பாக்கியால் சுட்டு மடக்கிப்பிடித்து கைது செய்தனர் .

அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கனவே ஒருவரது முகத்தில் மிளகாய் பொடியைத் தூவிப் பணத்தை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பது தெரியவந்தது .

இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது, போலீஸ் அதிகாரியை தாக்கிய உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முருகேசன் ரகுபதி ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் அடுத்த மாதம் 9 ஆம் தேதி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார் என தெரிகிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் வழங்கப்படும் என தெரிகிறது

The post சிங்கையில் குடிப்போதையில்  போலீசாரை தாக்கிய தமிழர் கைது! -( Video)  appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *