சித்ரவதைக்கு ஆளாகி 10 வயது ராகவ் மரணம்; பூசாரி கைது!

காஜாங்,டிச.07- தனது சொந்த மகனை அடித்து துன்புறுத்தி மரணத்தை விளைவித்தத ஆலயம் ஒன்றின் பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் சுயநினைவின்றி இருந்த 10 வயது ராகவ் ஷர்மாவை அவரது குடும்பத்தினர் செர்டாங் மருத்துவமனையில் இரவு 10.30 மணி அளவில் வந்து சேர்த்திருக்கின்றனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அச்சிறுவன் உயிரிழந்து விட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் ஸாப்பீர் முகமட் யூசோப் தெரிவித்தார்.

இறந்து போன ராகவ்வின் உடல் முழுவதும் காயங்களும், வீக்கங்களுமாக இருந்திருக்கின்றன. மேலும், சவப்பரிசோதனையில், அவர் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாலேயே உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பில், நேற்று காலை 9.30 மணி அளவில் 43 வயதான முத்துகிருஷ்ணன் என்ற செமினியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூசாரி கைது செய்யப்பட்டார்.

முத்துக்கிருஷ்ணனுக்கு 3 பிள்ளைகள். அவர்களில் உயிரிழந்த ராகவ் இரண்டாவது பிள்ளை. ராகவ்வின் தாயார் இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி தனியாகச் சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.

The post சித்ரவதைக்கு ஆளாகி 10 வயது ராகவ் மரணம்; பூசாரி கைது! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *