சிரிசேனா -மகிந்தாவை அடக்க சந்திரிகாவை களமிறக்கும் ரணில்!

கொழும்பு, ஜன.12- முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக்கும் நோக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக, அதிபர் சிரிசேனா மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரை அடக்குவதற்கு சந்திரிகாவே பொருத்தமாவனர் என்று பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி கருதுகிறது.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்நகர்வு முன்னெடுக்கப் பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விஷயத்தில் ஆளும் சுதத்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகின்றது.

மகிந்தா மற்றும் மைத்திரி கூட்டணிக்கு அரசியல் ரீதியில் அடி கொடுப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

அதே சமயம் இந்த விஷயம் குறித்து சந்திரிகாவின் நிலைப்பாடு என்னவென்பது இன்னும் வெளியாகவில்லை எனக் கொழும்பு ஊடகம் ஒன்று கூறுகிறது.

The post சிரிசேனா -மகிந்தாவை அடக்க சந்திரிகாவை களமிறக்கும் ரணில்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *