சிறந்த நிர்வாகியாக கோர்டியாலா தேர்வு !

லண்டன்,மே.15- இம்முறை இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண வெற்றியாளர்களான மென்செஸ்டர் சிட்டி அணியின் நிர்வாகி பேப் கோர்டியாலா சிறந்த நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இத்தவணை பிரிமியர் லீக் போட்டியில் கிண்ணத்தை வெல்ல  மென்செஸ்டர் சிட்டி அணிக்கும் லிவர்புல் அணிக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. போட்டியின் இறுதி வரை வெற்றியாளர்களை தீர்மானிக்க முடியவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தவணை போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவ்வணி பிரிங்டன் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதே போல் லிவர்பூல் அணியும் வோல்வெம்டன் அணியை வீழ்த்தியது.

இருப்பினும் புள்ளிப்பட்டியலில் சிட்டி அணி மொத்தமாக 98 புள்ளிகளை பெற்று 1 புள்ளி வித்தியாசத்தில் கிண்ணத்தை வாகை சூடியது. கடந்த முறையும் இவ்வணியே அக்கிண்ணத்தை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.  இத்தவணையில் இவ்வணி வெல்லும் இரண்டாவது கிண்ணம் இதுவாகும். முன்னதாக இஎப்எல் போட்டி கிண்னத்தையும் சிட்டி வென்றிருந்தது.  மேலும் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள எப்ஏ கிண்ண இறுதியாட்டத்தில் அவ்வணி வாட்பர்ட் அணியை எதிர்கொள்ளவிருக்கின்றது. அவ்வாட்டத்திலும் வெற்றி பெற்றால் இத்தவணையில் அவ்வணி மூன்று கிண்ணங்களை வாகை சூடிய பெருமையைப் பெறும்.

இந்நிலையில் இத்தவணைக்கான லீக் கால்பந்து அணி நிர்வாகி சங்கத்தின் சிறந்த அணி நிர்வாகியாக அவ்வணியைச் சார்ந்த கோர்டியாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனக்கு கடும் போட்டி வழங்கி வந்த லிவர்புல் அணி நிர்வாகி ஜோகர்ன் குலோப்பை விட கோர்டியாலாவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

The post சிறந்த நிர்வாகியாக கோர்டியாலா தேர்வு ! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *