சிறார்களுடன் தகாத உறவு: மைக்கேல் ஜேக்சன் பற்றி ஆவணப்படம்!

வாஷிங்டன், ஜன.11- ‘பாப்’ இசையுலகில் அரசன் என அழைக்கப்படும் மைக்கேல் ஜேக்சன் சிறார்களைபாலியல் வன்கொடுமை செய்தது உண்மைதான் என அவரால் பாலியல் வன்கொடும்க்கு ஆளான நபர் தெரிவித்துள்ளார்.

அதிக மருந்துகளை உட்கொண்ட காரணத்தால் 50 வயதில் மைக்கேல் ஜேக்சன் உயிரிழந்தார். அவர் மறைந்தாலும் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன.

அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ மைக்கேல் ஜேக்சன் கடந்த 1989 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு சிறுவர்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக சில தகவல்கள் வெளியிட்டது.

ஜேக்சனால் 17 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 5 சிறார் நடிகர்கள் மற்றும் 2 நடன கலைஞர்களும் உள்ளனர்.

இது போன்ற தகவல்கள் வெளிவராமல் இருப்பதற்காக 35 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையினை மைக்கேல் ஜேக்சன் செலவு செய்துள்ளதாகவும் எப்.பி.ஐ தகவலில் தெரிவிக்கப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

அவர் மீது பாலியல் குற்றச்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்ட செய்தி உலகம் முழுவதும் பரவியது. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவர் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் லிவிங் நெவர்லண்ட் என்ற பெயரில் மைக்கேல் ஜேக்சன் சிறுவர்கள் பாலியல் வன்முறையை பற்றிய ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 4 மணி நேரம் எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இம்மாதம் சன்டான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

இந்நிலையில் வன்புணர்வுக்கு ஆளான நபர் (வயது 30) மைக்கேல் ஜேக்சன் பாலியல் வன்புணர்வுப் பேர்வழி. அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்று குற்றஞ்சாட்டினார்.

The post சிறார்களுடன் தகாத உறவு: மைக்கேல் ஜேக்சன் பற்றி ஆவணப்படம்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *