சிறுமியை மிதித்துக் கொன்ற யானை

நியூடெல்லி, ஜுலை 12,  கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை வெளியே இழுத்து யானை ஒன்று மிதித்துக் கொன்றது.

முன்டாசி, சாம்புவா வனப்பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் சினி முன்டா என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். சம்பவத்தின் போது, சினி தம்முடைய அண்ணன் கணேஷ் மற்றும் அக்கா ராணியோடு கட்டிலில் உறங்கி கொண்டிருந்தாள்.

அப்பொழுது அவ்வழியே வந்த யானை வீட்டை முட்டியதன் விளைவாக அவ்விட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. உறங்கிக் கொண்டிருந்த சினியை யானை தும்பிக்கை கொண்டு வெளியே இழுத்து,  பின்னர் அச்சிறுமியை மிதித்துள்ளது.

மேலும், சுவர் இடிந்து விழுந்ததில் கணேஷ் மற்றும் ராணி கடுமையான காயங்களுக்கு இலக்காகி சாம்புவா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மேல் ஆன்லைன் செய்தி வெளியிட்டிருந்தது.

இதே போன்ற சம்பவம், கடந்த ஏப்ரல் மாதம் அங்குல் எனும் இடத்திலும் நிகழ்ந்துள்ளது என்றும் அச்சம்பவத்தில் 5 பேர் யானையால் மிதிபட்டு இறந்துள்ளனர் என  தி ஹிண்டு செய்தி குறிப்பிட்டிருந்தது.

The post சிறுமியை மிதித்துக் கொன்ற யானை appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *