சீபீல்ட் ஆலயக் கலவரம்: தீயணைப்பு வீரரை தாக்கிய 4 பேர் தடுத்து வைப்பு!

Please log in or register to like posts.
News

கோலாலம்பூர்,டிச.07- கடந்த வாரம் சீபீல்ட் ஆலயத்தில் நடந்த கலவரத்தில் தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பை தாக்கியது தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு ஆடவர்களை நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த நால்வரையும் கொலை முயற்சிக்கான பீனஸ் கோட் செக்‌ஷன் 307-கீழ் விசாரிக்க மாஜிஸ்திரேட் முகமட் நோர் ஹபிட்சுடின் யூசோப் அவ்வாறு உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்ட கலவரத்தின்போது தீயணைப்பு வண்டியில் இருந்து கீழே இழுத்து தள்ளப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதில், அடிப்பின் நுரையீரல், நெஞ்சு எலும்பு ஆகியவை பாதிக்கும் வரையில் மோசமான காயங்கள் ஏற்பட்டன. முதலில் சுபாங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அடிப். ஆனால், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கவும் அவர் தேசிய இருதயக் கழகத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சீபீல்ட் ஆலயக் கலவரம்: தீயணைப்பு வீரரை தாக்கிய 4 பேர் தடுத்து வைப்பு! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *