சீரற்ற வானிலை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்

In இலங்கை

Updated: 17:35 GMT, Jun 17, 2018 | Published: 17:35 GMT, Jun 17, 2018 |

0 Comments

1028

அம்பாறை பகுதியில் கோட்டைக்கல்லாறு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் ஆற்றிலிருந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிலவிய சீரற்ற கால நிலையை இந்த சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை பகுதியில் மீன் பிடிக்காக சென்றிருந்த அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு காணாமல் போனார் 39 வயதுடைய ஆர். இராஜகுமார் என்ற நபரே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை தேடும் பணியில் பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *