சுதுமலை பிரதேசத்தில் தீவிபத்து ஒருவர் உயிரிழப்பு!!!

யாழ்ப்பாணம், மானிப்பாய் சுதுமலை பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர் மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது திடீரென தீப்பற்றியதால் உயிரிழந்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆறுமுகம், துரைராஜா என்ற 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையெருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீர் இயந்திரத்தை இயக்குவதற்காக மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது பெற்றோல் போத்தலில் தீப்பற்றியதுடன் அது அவரது உடலிலும் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் பலத்த தீக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலப்பிரதி – இலங்கைச் செய்திகள் – www.theevakam.com

Loading...