சுபஸ்ரீ மரணம் குறித்து விமர்சித்த விஜய்..!!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழாவில் சுபஸ்ரீ மரணம் தொடர்பில் விஜய் பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இதன் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்துள்ளது.

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், யாரோட அடையாளத்தையும் எடுத்துக்கிடாதீங்க. உங்களுக்குனு ஒரு அடையாளத்தை கொண்டுவாங்க.

புடிச்சா எடுத்துக்கோங்க; இல்லைனா விட்டுருங்க. உலகத்துலயே உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகன்தான் என்றார்.

மேலும் பேசிய அவர், விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க.

எதனை யாரால் முடிக்க முடியும் என பார்த்து யாரை எங்க உக்கார வெக்கணும்னு திறமை வெச்சு முடிவு பண்ணுங்க.

பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்! சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி சாரதி மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள்.

இதுபோன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டேக் போடுங்க. சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க.

நாம கோல் போடுறத தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம்ம கூட இருக்கறவங்களே கூட சேம் சைட் கோல் போடுவாங்க.

எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். காரில் செல்லும் போது கருணாநிதியை பற்றி தவறாக கூறியவரை இறக்கி விட்டவர் எம்ஜிஆர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *