சுபாங்கிலிருந்து ஜோகூர் – சிங்கப்பூருக்கான விமானப் பயணங்கள் ரத்து

கோலாலம்பூர்   செப் 19 – புகை மூட்டத்தின் காரணமாக  பார்க்கும் தூரம் குறைந்ததை தொடர்ந்து ஜோகூர் மற்றும் சிங்கப்பூருக்கான  சில விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. சுபாங் சுல்தான் அப்துல் அஸிஸ்  ஷா விமான நிலையத்திலிருந்து   சிங்கப்பூர் செலத்தார் விமான நிலையத்திற்கான பயர் பிளை (Fire Fly) விமான நிறுவனத்தின் 3 சேவைகள் ரத்து செய்யப்பட்டன .

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஆகக் கடைசியான விபரங்கள் தெரிவிக்கப்படும் என்பதோடு தேவைப்பட்டால் சிங்கப்பூர் சாங்சி அனைத்துலக விமான நிலையத்திற்கு அந்த விமான பயணங்கள் ஏற்பாடு செய்யப்படும் திட்டம் இருப்பதாக  கூறப்பட்டது.

மேலும் சுபாங் சுல்தான் அப்துல்  அப்துல் அசிஸ்  ஷா விமான நிலையத்திலிருந்து  ஈப்போ சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகள்  ரத்து செய்யப்பட்டிருப்பதாக பெர்னாமா  தகவல்கள் கூறின.

The post சுபாங்கிலிருந்து ஜோகூர் – சிங்கப்பூருக்கான விமானப் பயணங்கள் ரத்து appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *