சுலக்ஸன், கஜன் வழக்கு ஒத்திவைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்குத் தொடுனர் தரப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் மன்றில் முற்படுத்தப்பட்டார். அவரது பதிவுப் புத்தகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிரதி மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பிரதி தனிச் சிங்கள மொழியில் காணப்பட்டது.

சாட்சியின் பிரித்தெடுக்கப்பட்ட பிரதியின் தமிழ் மொழிபெயர்ப்பை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் வழக்கை ஒத்தி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *