சுவாச கவசத்திற்கு பயங்கர கிராக்கி – அதிகரிக்கிறது விற்பனை

கோலாலம்பூர், செப் 19  – நாட்டில் புகைமூட்டம் மோசமானதை தொடர்ந்து பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் சுவாச கவசத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடைகளில் சுவாசக் கவசம் விற்பனை சூடு பிடித்துள்ளது. சந்தையில் பல்வேறு வகையான சுவாச கவசங்கள் விற்பனையில் இருந்தாலும் புகைமூட்ட பாதிப்புகளை ஆக்கபூர்வமாக  தடுக்கக்கூடிய N 95  வகையைக் கொண்ட சுவாச  கவசங்கள்தான் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு  பொருத்தமானது என்பதை சுகாதார அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.

சுவாசத்தின் மூலம் உள்ளே செல்லக்கூடிய நுண்ணிய கிருமிகளை 95 விழுக்காடு இந்த வகை சுவாசக் சுவாசங்கள் தடுக்கக்கூடும் ஆற்றலை கொண்டிருப்பதே  இதற்கான காரணமாகும். காற்றின் தூய்மைக்கேடு குறியீடு அளவு 200க்கும் மேல் அதிகரித்ததை தொடர்ந்து ஷா ஆலம் மற்றும்  கிள்ளான்  வட்டாரத்திலுள்ள பல்வேறு மருந்தகங்களில்  N95 சுவாச கவசங்களை பொதுமக்கள் அதிகமாக வாங்குதாக  பெர்னாமா ஆய்வில் தெரியவருகிறது.

மூக்கு மற்றும் வாயை மறைக்கக் கூடிய  N 95 சுவாச கவசங்களை வாங்குவதில் பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக  ஷா ஆலம் செக்ஷன் 7 ல்  உள்ள மருந்தகத்தின் விற்பனை உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஒரு யூனிட் N95  6 வெள்ளிக்கு  விற்கப்பட்டாலும் உடல் ஆரோக்கிய பாதுகாப்பு கருதி இந்த சுவாச கவசத்தை வாங்குவதற்கு மக்கள் தீவிரம் காட்டுகின்றனர் என அவர் சொன்னார்.

புகைமூட்டம் மோசமானதை தொடர்ந்து நேற்று காலையில் வந்த சுவாச  கவச கையிருப்பபு பிற்பகலுக்குள்  விற்றுத் தீர்ந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத  அந்த விற்பனை  உதவியாளர் தெரிவித்தார் .

இதனிடையே உலகிலேயே மோசமான காற்றுத் தூய்மைக் கேட்டுக்கு உள்ளான   நாடுகளின் பட்டியலில் மலேசியா  முதலிடம் வகிக்கிறது. கடந்த சில வாரங்களாக நாட்டில் ஏற்பட்டு வரும் புகை மூட்டத்தால் உலகத்திலேயே காற்றுத் தூய்மைக்கேடு உள்ளான நாடுகளின் பட்டியலில் மலேசியா முதலிடத்தில் உள்ளது

மலேசியாவுக்கு அடுத்த நிலையில் தென்னாபிரிக்கா, இந்தோனேசியா இந்தியா மற்றும் சீனாவிலும் காற்றின் தூய்மைக்கேடு மோசமாக இருப்பதாக  கூறப்படுகிறது. அண்டை நாடான சிங்கப்பூரில் காற்றின் தரக் குறியீடு 102 ஆகவும் தாய்லாந்தில் 147  ஆகவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சுவாச கவசத்திற்கு பயங்கர கிராக்கி – அதிகரிக்கிறது விற்பனை appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *