சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் தண்ணீர்க் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வறண்ட வானிலை தலை காட்டுவதை முன்னிட்டு சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் தண்ணீர்க் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Thurgau பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Graubünden பகுதியும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. Graubünden மற்றும் Sankt பகுதிகளில் வனப்பகுதிகளில் நெருப்பு பற்ற வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பார்பிக்கியூ முறையில் சமைக்க அனுமதிக்கப்படும் இடங்களில் கூட நெருப்பு பற்ற வைக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கத்தைவிட ஏரிகள் மற்றும் ஆறுகளின் நீர் மட்டம் இம்முறை குறைவாக உள்ளது. Constance ஏரி வழக்கமான அளவை விட 60 சென்றிமீற்றர் கீழே உள்ளது.

பல நாட்கள் தொடர்ச்சியான மழைக்கு பிறகே இந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *