சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கோரும் இளைஞர்களின் எண்ணிக்கை கடும் சரிவு

Please log in or register to like posts.
News

சுவிட்சர்லாந்தில் சட்டத்திருத்தம் மேற்கொண்டதன் பின்னர் குடியுரிமை கோரும் இளைஞர்களின் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை விதிகளில் திருத்தம் மேற்கொண்டதன் பின்னர் 500-கும் குறைவான இளைஞர்களே குடியுரிமை கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 15 ஆம் திகதி முதல் ஜூன் இறுதி வரையான காலகட்டத்தில் வெறும் 482 இளைஞர்களே குடியுரிமை கோரியுள்ளனர்.

இதில் இத்தாலியர்கள்(255) அதிக எண்ணிக்கையில் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து துருக்கி(65), கொசாவோ(38), ஸ்பானியர்கள்(17) மற்றும் போர்த்துக்கல்(17) என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை விதிகளை எளிமைப்படுத்துவதற்கு சுமார் 60.4 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

இது சுவிட்சர்லாந்தில் உள்ள மூன்றாம் தலைமுறையினருக்கு சாதகமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

மட்டுமின்றி 9 முதல் 25 வயதுக்கு உட்பட்ட சுமார் 25,000 இளைஞர்கள் சுவிட்சர்லாந்தின் பாஸ்போர்ட் பெற தகுதியானவர்கள் என ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *