சுவிஸ்ஸில் முதியோர் இல்லம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லம் ஒன்றில் ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 25 கிலோ வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.சூரிச்சின் Küsnacht பகுதியில் செயல்பட்டுவரும் முதியோர் இல்லத்தில் தோட்டம் ஒன்றை தயார் படுத்தும்போது இந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சூரிச் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அந்த முதியோர் இல்லத்தின் குடியிருப்பாளர்களை பத்திரமாக வேறு பகுதிக்கு மாற்றியுள்ளனர்.
பின்னர் அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உரிய அதிகாரிகளை வைத்து அந்த வெடிகுண்டை சோதனையிட்டுள்ளனர்.
ஆபத்து ஏதும் இல்லை என முடிவுக்கு வந்த அதிகாரிகள் மாலை 4.30 மணியளவில் அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
குறித்த வெடிகுண்டானது 25 கிலோ எடை கொண்டது எனவும், சுவிஸ் ராணுவத்தினரால் 1938 அல்லது 1939 காலகட்டத்தில் பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.
தற்போது அந்த வெடிகுண்டை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *