சுவிஸ் இளைஞர்கள் டேட்டிங் தளங்களால் கடும் சிக்கலில்!

சுவிட்சர்லாந்தில் டேட்டிங் தளங்களால் இளைஞர்கள் பலர் பால்வினை நோய்களுக்கு இரையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பால்வினை நோயால பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் மேக வெட்டை நோய் எனப்படும் கொனொரியாவால் சுமார் 2,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த பல ஆண்டுகளை விடவும் அதிகம் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி கடந்த ஓராண்டில் மட்டும் சிபிலிஸ் தொற்றால் சுமார் 11,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதற்கான முக்கிய காரணங்களாக கருதப்படுவது டேட்டிங் செயலிகள் எனவும், பாலியல் உறவு எளிதாக கிடைப்பதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி, குறித்த செயலிகளின் அறிமுகத்தால் இளைஞர்கள் பலர் பல பாலியல் துணைகளை தேடிக் கொள்வதும் பால்வினை நோய்கள் பாதிப்புக்கு காரணமாக அமைகின்றது.

சுவிஸின் நகர பிரதேச மக்களே பால்வினை நோய்களுக்கு அதிகமாக இரையாகின்றனர். பெரும்பாலும் சூரிச், ஜெனீவா மற்றும் பேஸல் மண்டலங்களில் அதிகமாக இளைஞர்கள் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் 20 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் காண்டம் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டாலும் வாய்வழி உறவு காரணமாக பால்வினை நோய்கள் பரவுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *