சுவிஸ் கால்பந்து அணி வீரர்களுக்கு கோபமூட்டிய பொதுச் செயலரின் கேள்வி

Please log in or register to like posts.
News

சுவிஸ் கால்பந்துக் கூட்டமைப்பின் பொதுச் செயலரான Alex Miescherஇன் கேள்வி அணியிலுள்ள இரட்டைக் குடியுரிமை கொண்ட கால்பந்து அணி வீரர்களுக்கு கோபமூட்டியுள்ளது.

தேசிய அணிக்கு இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேவையா என கேள்வி எழுப்பியிருந்தார் சுவிஸ் கால்பந்துக் கூட்டமைப்பின் பொதுச் செயலரான Alex Miescher.

உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் செர்பியாவுக்கு எதிராக கோல் அடித்ததைக் கொண்டாட அல்பேனியப் பின்னணி கொண்ட இரண்டு வீரர்கள் உட்பட மூவர் அல்பேனிய தேசிய சின்னம் ஒன்றைப் போல் கைகளால் சைகை காட்டியதற்காக FIFA அவர்களுக்கு அபராதம் விதித்தது.

பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த Alex Miescher, அந்த நிகழ்ச்சி ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதைக் காட்டுகிறது.

தேசிய போட்டிகளுக்கு இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேவையா என நம்மையே நாம் கேட்க வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்.

இதனால் சுவிஸ் அணி வீரர் Granit Xhaka கோபமடைந்துள்ளார்.

Alex Miescher, என் போன்ற இரட்டைக் குடியுரிமை கொண்ட தற்போதைய வீரர்களையும் எதிர்கால வீரர்களையும் ஏமாற்றத்துள்ளாக்கியிருக்கிறார் என்று கூறினார் Granit Xhaka.

Alex Miescherஇன் கருத்து, இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் சுவிட்சர்லாந்துக்காக தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இல்லை என்று கூறுவது போலிருக்கிறது என்றார் அவர்.

அவரது கருத்து என்னையும், இரட்டைக் குடியுரிமை கொண்ட பல வீரர்களையும் பாதிக்கிறது, சுவிஸ் சீருடையை அணிந்து கொண்டு சுவிட்சர்லாந்திற்காக அனைத்தையும் நாங்கள் அளிக்கவில்லை என்பது போலிருக்கிறது அவர் கூறுவது என்று கூறியுள்ளார் Granit Xhaka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *