சூர்யா குடும்பத்தாருக்கே இப்படி ஒரு சோதனையா?

Please log in or register to like posts.
News

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு தென்னிந்தியா முழுவதும் பிரமாண்ட ரசிகர் வட்டாரம் உள்ளது.

சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா, ஸ்டுடியோ க்ரீன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தின் கீழ் தான் பல படங்களில் சூர்யா நடித்துள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் ஞானவேல்ராஜா கருத்து வெளியிடுகையில், ‘தெலுங்கில் எல்லாம் நடிகர்களின் படங்கள் ரூபா 100 கோடி வரை ஷேர் கிடைக்கின்றது . ஆனால், ரூபா 15 கோடி சம்பளம் தான் தெலுங்கிற்கு கிடைக்கின்றது.

தமிழில் மட்டும் நடிகர்களின் சம்பளம் ரூபா 50 கோடியாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். சூர்யா நடித்த படங்கள் அதிகம் இவருடையதுதான். இந்நிலையில், இவர் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளார்.

எடுத்த அனைத்து படமும் நஷ்டம் தான் அடைகின்றது, இதற்கு நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அப்படி இல்லை என்றால் நான் தமிழகத்தை விட்டு தெலுங்கு பக்கம் சென்று விடுவேன்’ என்று மிகவும் ஆதங்கமாக பேசியுள்ளார்.

விஷால் அணியின் சார்பாக வெற்றிபெற்று தயாரிப்பாளர் சங்கச் செயலாளராக இருந்த ஞானவேல்ராஜா, விநியோகஸ்தர் தரப்பிலும் தங்களது அதிகாரத்தை நிறுவுவதற்காக செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில், தமிழ் சினிமா நடிகர்கள் வாங்கும் சம்பளத்தால் தான் தெலுங்கு சினிமா பக்கம் போகும் முடிவில் இருப்பதாக வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

‘தெலுங்கு சினிமா உலகத்தைப் பார்த்து நாம கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. நடிகர்களின் சம்பளம் தான் இங்கே பெரிய பிரச்சினையா இருக்கு. அதில் நடிகர் சங்கம் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும்.
தமிழ் சினிமாவில் சிலரோட சுயநலம் எல்லாத்துக்கும் தடையா இருக்கு. நடிகர்களின் வியாபாரத்திற்கு ஏற்ற சம்பளம் தான் கொடுக்கணும்.

இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள இந்தச் சூழல் தமிழ் சினிமாவில் வரணும். நான் ஏற்கெனவே தெலுங்குப் பக்கம் ஆபிஸ் போட்டுட்டேன். தமிழ் சினிமாவுக்கு டாட்டா சொல்லிட்டு டோலிவுட் பக்கம் போற ஐடியாவில் இருக்கேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *