செக்ஸ் வீடியோ: எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை! -ரபிஸி திட்டவட்டம்

கோலாலம்பூர், ஜூன் 15- பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினப்புணர்ச்சி செக்ஸ் வீடியோவிவகாரத்தின் பின்னணியில் தமக்கு சம்பந்தம் இருப்பதாக கூறப்படுவது குறித்து பிகேஆர் கட்சியின் உதவி தலைவரான ரபிஸி ரம்லி மறுத்திருக்கிறார்.

இந்த வீடியோ விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் தாம் எந்த வகையிலும் சம்பந்தப்பட விரும்பவில்லை என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.

தம்மை சம்பந்தப்படுத்தி வெளிவரும் தகவலை அவர் முற்றாக நிராகரித்தார். இத்தகைய செயல்கள் அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்கும் படி செய்யவும் பிகேஆர் கட்சியை களங்கப்படுத்தவும் காரணமாக அமைகின்றன என்பதால் அது பற்றி கருத்துரைக்க விரும்பவில்லை என்று முகநூல் பதிவில் ரபிஸி ரம்லி தெரிவித்திருக்கிறார்.

அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய அந்த வீடியோவில் இருக்கும் மற்றொரு நபர் என அப்துல் ஹாஸிக் அஸீஸ் என்பவர் பகிரங்கமாக அறிவித்து இருப்பது தொடர்ந்து அந்த நபர் பிகேஆர் கட்சியில் ரபிஸி ரம்லி தரப்புகளுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்று சபா மாநில இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் பிலிசன் ஸைனுடின் செய்தியாளர்களிடம் பேசியிருப்பதை தொடர்ந்து ரம்லி அது பற்றி கருத்துரைத்தார்.

எந்த வகையிலும் அந்த நபர் எனக்கு நெருக்கமானவர் அல்ல. முதலில் இவர் பிகேஆர் கட்சி விட்டு வெளியேறி, பின்னர் பிகேஆர் கட்சியில் மீண்டும் சேர்ந்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தேர்தலில் போட்டி போட்ட போது அது குறித்து முதலில் கேள்வி எழுப்பியது நான்தான் என்று ரபிஸி சொன்னார்.

ஹாஸிக்கைப் பொறுத்தவரையில் அவர் சிலாங்கூர் மாநில பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் நஜ்வான் ஹில்மியின் நெருங்கிய ஆதரவாளர் ஆவார். அதேவேளையில் நஜ்வான் எப்போதுமே அஸ்மினின் ஆதரவாளர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்று ரம்லி விளக்கினார்.

இந்த வீடியோவை விவகாரத்தின் பின்னணியில் தாம் சம்பந்தப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிலிசன் ஸைனுடின் வெளியிட்டுள்ள அறிக்கை அமைந்திருப்பதாக ரம்லி தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் யாரும் இழுக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். பொதுவாக இந்த செக்ஸ் வீடியோ விவகாரத்தை அதிகாரிகள் தற்போது நடத்தி வரும் விசாரணைக்கே முற்றாக தான் விட்டுவிடுவதாக அவர் சொன்னார்.

The post செக்ஸ் வீடியோ: எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை! -ரபிஸி திட்டவட்டம் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *