சொசுகுப் படகில் 37 கிலோ ஷாபு: – 6 மலேசியர்கள் கைது

ஜகார்த்தா, ஜூன் 12 – சொகுசுப் படகில் மெத்தாம்பெத்தாமின் எனும் ஷாபு போதைப் பொருளைக் கடத்திய 6 மலேசியர்களை இந்தோனேசிய போலீசார் கைது செய்தனர்.

வட ஜகார்த்தா, பத்தாவியா சுன்டா கிளாப்பா ஜெட்டியில் நிறுத்தப்பட்டிருந்த அந்தப் படகில் ஜூன் 4இல் இரவு 9.30க்கு நுழைந்த இந்தோனேசிய போலீசார் 37 கிலோ ஷாபுவைக் கைப்பற்றினர்.

அந்தப் படகு ஜோகூரிலிருந்து ஜகார்த்தாவுக்கு வந்ததாக இந்தோனேசிய குற்றவியல் புலனாய்வு இலாகா இயக்குநர் கிரிஸ்னோ ஶ்ரீகார் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டவர்களில் 5 பேர் ஜோகூரையும் ஒருவர் பேராவையும் சேர்ந்தவர்கள்.  அந்தப் போதைப் பொருள் மியன்மார் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.

The post சொசுகுப் படகில் 37 கிலோ ஷாபு: – 6 மலேசியர்கள் கைது appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *