சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாதுகாப்பான ஆட்டமா?- வியப்பில் சச்சின் தெண்டுல்கர்

ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாதுகாப்பான (defensive batting) ஆட்டத்தை வெளிப்படுத்தியதை நான் பார்த்ததில்லை என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #AUSvIND

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 88 ஓவரில் 250 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி, அஸ்வின் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

பெரும்பாலும் பாதுகாப்பு ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனால் 2-வது நாளில் 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இஷாந்த் சர்மா 15 ஓவவர்கள் வீசி 6 மெய்டனுடன் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு 2.07 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

பும்ரா 20 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஒரு ஓவருக்கு 1.70 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அஸ்வின் 33 ஓவர்கள் வீசி 50 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு 1.52 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஷமி 16 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஒரு ஓவருக்கு 3.19 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இதுபோன்று பாதுகாப்பான ஆட்டத்தை விளையாடியது கிடையாது என்று சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து சச்சின் தனது ட்வீட்டில் ‘‘இந்தியா இந்த சூழ்நிலையை அதிக அளவில் உருவாக்க வேண்டும். தங்களது பலத்தை விட்டுவிடக் கூடாது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சொந்த மண்ணில் பாதுகாப்பு ஆட்டம் மனநிலையுடன் விளையாடினார்கள். இதற்கு முன் எனது அனுபவத்தில் அப்படி பார்த்தது கிடையாது. அஸ்வின் அபாரமாக பந்து வீசினார். தற்போது வரை அணி நல்ல நிலைமையில் இருக்க அவர்தான் காரணம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *