சோகத்தில் மூழ்கிய அமைச்சர் குடும்பம்! எம்பி ராம் சந்திரா திடீர் மரணம்!

மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் சகோதரர் ராம் சந்திரன் பஸ்வான் இன்று மதியம் மாரடைப்பால் மரணமடைந்தார்.

பீகார் மாநிலம் சமஸ்தீபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர் மூன்றாவது முறையாக மக்களவைக்கு சென்றார். பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் அவர் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 10 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து ஆஞ்சியோ உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் இன்று மதியம் அவர் மறைந்ததாக ராம்விலாஸ் பஸ்வானின் மகன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ராமச்சந்திர பஸ்வனுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். 57 வயதிலேயே அவர் மரணம் அடைந்திருப்பது அவர் குடும்பத்திற்கும் அவருடைய கட்சிக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.