ஜிஎஸ்டி பணத்தை தே.மு கொள்ளையடித்ததா? இர்வான் எம்ஏசிசியில் புகார்

Please log in or register to like posts.
News

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.10- ஜிஎஸ்டி வரிப் பணத்திலிருந்து 18 பில்லியன் ரிங்கிட் பணம் காணாமல் போனதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, நிதி அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.

காலை மணி 9.30-க்கு ஊழல் தடுப்பு ஆணையத்தினுள் சென்ற இர்வான் இரண்டு மணி நேரம் கழித்துதான் வெளிவந்தார்.

காணாமல் போனதாக கூறப்படும் அந்த 18 பில்லியன் ரிங்கிட் பணத்தை தேசிய முன்னணி அரசு கொள்ளையடித்துவிட்டதென நிதியமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டிருப்பது அடிப்படையற்றது. இது குறித்து இன்று மாலை போலிசிலும் புகார் செய்யவிருப்பதாக அவர் கூறினார்.

இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என்று ஊழல் தடுப்பு ஆணையம் உறுதியளித்திருப்பதாக இர்வான் குறிப்பிட்டார்.

வசூல் செய்யப்பட்ட வரிப் பணம் அனைத்தும் அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது. அதனால் அந்த பணம் காணாமல் போக வாய்ப்பில்லை என்றார் அவர். அது தொடர்பில் ஆவணம் ஏதும் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டதா என்று கேட்கப்பட்டபோது, அனைத்து ஆவணங்களும் நிதியமைச்சில் இருப்பதாக இர்வான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *