`ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரிலுக்கு டும் டும் டும்!

`ஜிமிக்கி கம்மல்’ பாடல் மூலம் பிரபலமான ஷெரிலுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

ஷெரில்

ஒரே பாடலில் சமூக வலைதளங்களின் சென்சேஷனல் ஹிட் அடித்து, அதன் மூலம் பிரபலமானவர் `ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் ஜி.கடவன். மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் “வெளிப்பாடிண்டே புஸ்தகம்.” இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்தான் ‘என்னடம்மேட ஜிமிக்கி கம்மல்.’ ஓணம் பண்டிகையின்போது அந்தப் பாடலுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள கல்லூரி ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நடனமாடியிருந்தனர். அவர்கள் நடமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

அந்த வீடியோவில் நடனமாடியிருந்த ஷெரிலுக்கு, தமிழகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர். மேலும், ஃபேஸ்புக், ட்விட்டர் என ஷெர்லியின் புகழ் பரவத் தொடங்கியது. அந்தப் பாடல் வெளியான பின்னர், ஊடகங்கள் பலவற்றிலும் ஷெரிலின் இன்டர்வியூ குவிந்தது. நடிகர் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு’ பாடலின் யூடியூப் மேக்கிங் வீடியோவிலும் அவர் திரையில் தோன்றினார். அவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும், தனக்கு ஆசிரியர் பணியில்தான் விருப்பமென்று, அவரது பணியைத் தொடர்ந்தார். இந்நிலையில், தற்போது ஷெரிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ப்ரஃபுல் டாமி (Praful Tomy Amamthuruthil) என்பவருடன் ஷெரிலுக்கு, சில தினங்களுக்கு முன்பு நிச்சயம் முடிந்துள்ளது. திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *