ஜூன் 7ஆம் தேதி பதவி விலகுகிறேன்! – பிரிட்டன் பிரதமர் அதிரடி முடிவு

லண்டன்,மே.24- பிரிட்டன் பிரதமர் தெரேசா மே வரும் ஜூன் 7ஆம் திகதியன்று பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியாவதற்கான வரையரைகளை நிர்ணயித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கு  ஒரு புதிய தலைவருக்கு  வழி விட வேண்டும் என்ற நோக்கில் அவர் இப்பதவியை துறப்பதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலன் கருதி புதிய பிரதமருக்கு வழி விடுவதே தற்பொழுது அவசியமாகிறது. எனவே கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிஸ்ட் கட்சி தலைவர் பதவியிலிருந்தும் வரும் ஜூன்  7ஆம் தேதியன்று விலகி கொள்கிறேன் என்றார் அவர்.

இந்நாட்டின் சரித்திரத்தில் நான் இரண்டாவது பெண் பிரதமர். ஆனால் இந்த எண்ணிக்கை இரண்டோடு நின்று விடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தெரேசாவின் இந்த அதிரடி முடிவு உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஜூன் 7ஆம் தேதி பதவி விலகுகிறேன்! – பிரிட்டன் பிரதமர் அதிரடி முடிவு appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *