ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும் இருந்த மறைந்த என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகா உருவாக்கும் நிலையில். இந்த படத்தில் என்.டி.பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு போட்டியாக மற்றொரு முன்னாள் முதல்வர் கதையும் படமாகிறது என தகவல்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

ஆந்திர முதல்வராக இருந்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஒய்.எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கையை வாழ்க்கை சரித்திர படமாக்க திட்டமிட்டுள்ளனர். ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் மம்மூட்டியும், ஒய்.எஸ்.ஆர்-ன் மனைவி விஜயம்மாவாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் மகிராகவ் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு யாத்ரா என பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திரா முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கில் தயாராகிறது. இந்த திரை படத்தை இயக்குனர் தேஜா இயக்குகிறார். இந்த படத்தில் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணாவே அரசியல்வாதி என்.டி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்க இருக்கிறார்.

என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படத்தின் படபிடிப்பனது சமீபத்தில் துவங்கியது. இந்த நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சரான மறைந்த ஜெயலலிதா, தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக இருந்த போது,தெலுங்கில் என்.டி.ஆர் உடன் பல படங்கள் நடித்துள்ளார்.

எனவே, என்.டி.ஆர்-ன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரமும் இடம் பெறுகிறது. இரண்டு மொழிக்கும் நன்கு தெரிந்த நடிகையை இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க நினைத்தனர். அதற்கு, காஜல் அகர்வால் பொருத்தமாக இருப்பாதாக படக்குழுவினர் கருதியதால், ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க காஜல் அகர்வல் ஒப்பந்தமாகியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.