ஜொகூர் மந்திரி புசார் அத்துமீறலா? சந்திப்பை ரத்து செய்தது சிங்கை!

கோலாலம்பூர், ஜன.12- சிங்கை கடல் எல்லை வரையில் அனுமதியின்றி ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஒஸ்மான் சாபியான் நுழைந்ததாகவும் அதன் காரணமாக, மலேசிய- சிங்கப்பூர் இடையில் திங்கட்கிழமை நடக்கவிருந்த பேச்சு வார்த்தை ரத்து செய்யப் படுவதாகவும் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

14-ஆவது இஸ்கண்டார் மலேசிய கூட்டு அமைச்சர்நிலை குழு கூட்டத்தில் கலந்துக் கொள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு மற்றும் மலேசிய வெளியுறவு அமைச்சு ஒப்புக் கொண்டதாக சிங்கப்பூர் அறிக்கையில் கூறியது.

ஆனால், சிங்கப்பூரின் துவாஸ் பகுதியின் பிராந்திய நீரிணையில், ஜொகூர் மந்திரி புசார் அத்துமீறி நுழைந்ததால், அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதில்லை என்று சிங்கப்பூர் முடிவெடுத்தது.

அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப் பட வேண்டும் என்று சிங்கப்பூர் பரிந்துரைத்ததாகவும், அதனை மலேசியா ஏற்றுக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த நீரிணை பகுதியில் தாம் நுழையவில்லை என்று ஜொகூர் மந்திரி புசார் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜொகூர் மந்திரி புசார் அத்துமீறலா? சந்திப்பை ரத்து செய்தது சிங்கை! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *