டிரம்ப் – ஜஸ்டின் ரூடோ சிறப்புமிக்க சந்திப்பு விரைவில்…

can_pm_trumpஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடன் நல்லிணக்கப் பேச்சுவார்த்தை ஒன்றை இன்னும் ஓரிரு நாட்களில் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைக்காக டிரம்ப் கனடாவிலுள்ள பாபின் தீவுகளுக்குச் செல்லவுள்ளார்.

அண்மையில் வடகொரியாவுடனான சந்திப்பிற்கு பின்னர் கனடா பிரதமருடன் பேசாமலிருந்த டிரம்ப், ஜி-7 மாநாட்டிற்கு பின்னர் கனடா பிரதமர் தனது முதுகில் குத்திவிட்டதாக கருத்துத் தெரிவித்திருந்தார்.

வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அடுத்த சவாலான சந்திப்பாக இதனை டிரம்ப் கருதுகிறார்.

கனடா பிரதமரை கடுமையாக விமர்சித்த நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள சந்திப்பாகையால் இதனையும் சிறப்புமிக்க சந்திப்பாக உலக நாடுகளால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தேசத் தலைவர்கள் இராணுவத்தோடும், அதிகார நோக்கோடும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் டிரம்பிற்கு இருப்பதால் ஜஸ்டின் ரூடோவின் அமைதி அவருக்கு தவறாகப் தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *