டே-நைட் டெஸ்டில் விளையாடாதது இந்தியாவின் சுயநலம் – மார்க் வாக் விமர்சனம்

Please log in or register to like posts.
News

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டே-நைட் டெஸ்டில் விளையாட மறுத்தது இந்தியாவின் சிறிய அளவிலான சுயநலம் என மார்க் வாக் விமர்சனம் செய்துள்ளார். #DayNightTest

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாக் உள்ளார். இவர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா பயணத்தின்போது டே-நைட் பிங்க் பந்தில விளையாட மறுத்ததில், இந்தியாவின் பக்கம் இருந்து பார்க்கையில் லேசான சுயநலம் உள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 3-வது டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. ஆஸ்திரேலியா சில வருடங்களாக அடிலெய்டில் நடைபெறும் டெஸ்டை பகல்-இரவு டெஸ்டாக பிங்க் பந்தில் நடத்தி வருகிறது. முதன்முறையாக ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

அதன்பின் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் ஆக விளையாடியது. இதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்தியாவும் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், இந்திய அணி பிங்க் பந்தில் போதுமான அளவு பயிற்சி பெறவில்லை. இதனால் பகல்-இரவு போட்டியில் விளையாட இயலாது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு கடிதம் எழுதியது. இதனால் அடிலெய்டு டெஸ்ட் வழக்கமான நடைமுறைபோல் பகல் டெஸ்ட் ஆகத்தான் இருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பகல்-இரவு டெஸ்டில் விளையாடவில்லை.

 ஆஸ்திரேலியா- இந்தியா தொடர் பற்றிய செய்திகள் இதுவரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *