டொனால்ட் டிரம்ப் ‘கோ பேக்’ டுவிட்டையடுத்து நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல்!

வாஷிங்டன், ஜூலை. 21-டொனால்ட் டிரம்ப் ‘கோ பேக்’ டுவிட்டையடுத்து இந்து சாமியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். அமெரிக்க, அமெரிக்க மக்களுக்கே என்ற கொள்கையை விடாப்பிடியாக இருக்கும் அவர் பிற நாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் மீது எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டு உள்ளார். இதனால் அவர் அவ்வப்போது இன ரீதியிலான கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்

இதற்கிடையே நியூயார்க் நகரில் பிலோரல் பகுதியில் இந்து சாமியார் சுவாமி ஹரிஸ் சந்தர் புரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது .கடந்த வியாழக்கிழமை 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது என உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சாமியார் மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் .ஜூலை 18ம் தேதி நடந்த தாக்குதலின் போது அவரது முகம் உட்பட அவரது உடல் முழுவதும் காயங்களை மற்றும் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. நான் வேதனையில் இருக்கிறேன் என்று மட்டும் சாமியார் கூறியுள்ளார்

The post டொனால்ட் டிரம்ப் ‘கோ பேக்’ டுவிட்டையடுத்து நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *