ட்விட்டர் பிரபலங்களின் பட்டியலில் விஜய்க்கு 8-வது இடம்

Please log in or register to like posts.
News

இந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்டவர்கள் பட்டியலில் நடிகர் விஜய்க்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. #Vijay #TwitterTrend

அரசியல், சினிமா, விளையாட்டு துறைகளில் 2018-ம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலை டுவிட்டர் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது.

10 பேர் கொண்ட பட்டியலில் இந்திய அளவில் நடிகர் விஜய்க்கு 8-ம்இடம் கிடைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடம் ராகுல் காந்திக்கு கிடைத்துள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 பிரபலங்கள் வருமாறு:-

1. மோடி. 2. ராகுல் காந்தி. 3. அமித் ஷா. 4. யோகி ஆதித்யநாத். 5. அரவிந்த் கெஜ்ரிவால். 6. பவன் கல்யாண். 7. ஷாருக் கான். 8. விஜய். 9. மகேஷ் பாபு. 10. ஷிவ்ராஜ் சிங் சவுகான்.

விஜய் நடித்த மெர்சல் படத்தை தொடர்ந்து, சர்கார் படமும் இந்திய அளவில் சர்ச்சையாகி பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இதன் தாக்கம் தான் சமூகவலைதளங்களிலும் எதிரொலித்து இருக்கிறது. #Vijay #TwitterTrend

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *