ஆசிரியர் – Sellakumar

தந்தையின் கோரத் தாக்குதலில் மகனின் இரு கால்களும் முறிந்தன

தந்தையின் கோரத் தாக்குதலில் இரு கால்களும் முறிந்த நிலையில் சிறுவன் ஒருவன் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.  

முல்லைத்தீவு மாவட்டம்  மாங்குளம்  நீதிபுரத்தைச் சேர்ந்த 11 வயதுடைய கோபாலகிருஸ்ணன் – இசைப்பிரியன் என்ற சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

இந்த செய்தி தொடர்பில் மேலும் தெரிய வருவது 

சிறுவனை தந்தை   கடுமையாகத் தாக்கியதால்.  இரு கால்கள்   மற்றும் உடல் பகுதியிலும் காயங்களுடன் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுவனின் இரு கால்களும் முறிவடைந்த நிலையில் காணப்பட்டதனால் மாங்குளம் வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் உடனடியாக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதேநேரம் குறித்த தந்தை இதற்கு முன்பும் குடும்ப வன்முறையில் ஈடுபட்டு சிறை சென்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.-