தலைவலியை கொடுக்கும் டெய்ல் எண்டர்ஸ்- அடிலெய்டிலும் தொடர்கிறது

Please log in or register to like posts.
News

எதிரணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு டெய்ல் எண்டர்ஸ் தலைவலி கொடுத்து வருவது தொடர்கதையாகி வருகிறது. #AUSvIND

இந்திய டெஸ்ட் அணி கடந்த சில வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சொந்த மண்ணில் ஜாம்பவனாக விளங்கிய இந்திய அணி தற்போது வெளிநாடுகளில் விளையாடி வருகிறது. பந்து வீச்சில் அசுர பலத்துடன் விளங்குகிறது. ஆனால் பேட்டிங்கில் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை 1-2 என இந்தியா இழந்தது. அதன்பின் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் 1-4 என தோல்வியடைந்தது.

இந்த தொடரில் இந்தியா சார்பில் விராட் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடினார். கடைசி டெஸ்டில் மட்டும் லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் சதம் அடித்தனர்.

இங்கிலாந்து தொடரில் இந்திய பந்து வீச்சாளர்களான ரிஷப் பந்த், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இங்கிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன்களை நிலைத்து நின்று விளையாட விடவில்லை. அதேசமயம் டெய்ல் எண்டர்ஸ் என அழைக்கப்படும் கடைநிலை வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களை இந்திய பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் குறைந்த ரன்களில் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

தற்போது ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. இதிலும் டெய்ல் எண்டர்ஸ் என்ற சோதனை தொடர்ந்த வண்ணமே உள்ளன.

அடிலெய்டு பிட்ச் ரன் குவிப்பிற்கு சாதகமான வகையில் இல்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 127 ரன்னிற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

7-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். அப்போது டிராவிஸ் ஹெட் 21 ரன்னுடன் களத்தில் இருந்தார். பேட் கம்மின்ஸை துணைக்கு வைத்துக் கொண்டு டிராவிஸ் 17.3 ஓவர்கள் கடத்தி விட்டார். இந்த நேரத்தில் டிராவிஸ் ஹெட் – கம்மின்ஸ் ஜோடி 50 ரன்கள் எடுத்துவிட்டது. கம்மின்ஸ் 47 பந்தில் 10 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து ஸ்டார்க் களம் இறங்கினார். ஸ்டார்க்கை வைத்துக்கொண்டு அரைசதம் அடித்ததோடு 2-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் உள்ளனர்.

முன்னணி பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு, டெய்ல் எண்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் தலைவலி கொடுத்து வருகிறது இன்னும் நீண்டு கொண்டே வருகிறது.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *