தளபதி 63 – அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு

விஜய் – அட்லி கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு தளங்களைத் தேர்வு செய்வதற்காக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் அவர்கள் எடுத்த புகைப்படத்தை படக்குழு டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Vijay63 #Thalapathy63

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *