தானியங்கி சலவைக் கடையில் கூடைத் திருடன்

கோம்பாக், ஜூலை 18, சுங்கை துவா தானியங்கி சலவைக் கடையில் வைக்கப்பட்டிருந்த துணிக் கூடைகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்லும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி மக்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த செவ்வாய் கிழமை நடந்த இச்சம்பவம் அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்புக் காமிராவில் பதிவாகியுள்ளது.

அந்த 59 வினாடி கொண்ட காணொளியில் சிவப்பு நிற சட்டை மற்றும் தலைக் கவசம் அணிந்திருந்த அந்த ஆடவன்  கையில் துணிப் பையுடன் கடையிலுள் நுழைந்துள்ளான். கொண்டு வந்த பையை அங்குள்ள மேஜையின் மீது வைத்து, பையின் சிப்பை மூடிய பின் அவனுடைய மோட்டார் சைக்கிளிடம் சென்று திரும்ப கடைக்குள் வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கூடைகளைத் திருடிக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஓடுவது அந்த ரகசிய காமிராவில் பதுவாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவிய அந்த காணொளியைக் சுமார்  100,000 சமூக வலைத்தளவாசிகள் கண்டு அதற்கு தங்களுடைய கருத்துகளையும் பதிவிறக்கம் செய்துள்ள வேளையில் அந்த காணொளியை 200 முறை பகிரப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் காணொளிக்கு நிறைய சமூக வலைத்தளவாசிகள் தங்களுடைய வேடிக்கையான கருத்துகளைத்  தெரிவித்துள்ளனர்.

The post தானியங்கி சலவைக் கடையில் கூடைத் திருடன் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *