திருட்டு நகைகளை விற்க முயன்ற இருவர்!!

திருட்டு நகைகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீடொன்றில் 15 பவுன் நகைகள் மற்றும் இரு கைத் தொலைபேசிகள் திருடப்பட்டன.

இது தொடர்பில் இளவாளைப் பொலிஸ் நிலையத்தில் முறையிப்பட்டது.

அதேவேளை இருவர் யாழ். நகரில் உள்ள தனியார் கடையில் நகைகளை விற்பனை செய்ய முயன்றனர். சந்தேகம் கொண்ட கடை உரிமையாளர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.

இருவரையும் கைது செய்த பொலிஸார். அவர்களிடமிருந்த நகைகளையும் மீட்டனர். மாதகலில் திருடப்பட்ட நகைகள் அவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *