திருநங்கைகளுடன் கழிவறைகளை பெண்கள் பகிர்ந்துக் கொள்வதா? ஆபத்து’ –பாஸ்

கோலாலம்பூர், செப்.14- திருநங்கைகள் தங்களின் தோற்றத்தை பெண்கள் போன்று மாற்றிக் கொண்ட போதிலும், அவர்களுக்கு ஆண்களின் வலிமை குறைவதில்லை. அதனால், திருநங்கைகளுடன் பெண்கள் பொது கழிவறைகளை பகிர்ந்துக் கொண்டால், அவர்களின் பாதுகாப்பிற்கு பாதகம் ஏற்படும் என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இட்ரீஸ் அகமட் கூறினார்.

“திருநங்கைகள் ஆண்கள் தான். ஆண்களின் வலிமை அவர்களுக்கு உண்டு. அவர்கள் பெண்கள் கழிவறையை பயன்படுத்த நாம் அனுமதி வழங்கினால், அது பெண்களின் பாதுகாப்பிற்கு மிரட்டலாக அமையும்” என்று அவர் சொன்னார்.

இதனைச் சுட்டிக் காட்டி, திருநங்கைகள் பெண்கள் பொது கழிவறைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப் பட வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது ஏற்புடைய கருத்தாக இல்லை என்று இட்ரீஸ் சொன்னார்.

The post திருநங்கைகளுடன் கழிவறைகளை பெண்கள் பகிர்ந்துக் கொள்வதா? ஆபத்து’ –பாஸ் appeared first on Vanakkam Malaysia.