திருமணமான பெண்ணுடன் கூடா நட்பு வைத்திருந்த இளைஞன்… கணவன் வெறிச்செயல்

திருமணமான பெண்ணுடன் கூடா நட்பு வைத்திருந்த இளைஞன்… உண்மை தெரிந்த கணவன் வெறிச்செய்

தமிழகத்தில் திருமணமான பெண் ஒருவருடன் இளைஞன் பழக்கம் வைத்திருந்தால், அவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூ​ச் சேர்ந்தவர் தினேஷ். இவர் சம்பவ தினத்தன்று நடந்து சென்று கொண்டிருந்த போது, ஆட்டோவில் வந்த இரண்டு பேர் கத்தியால் அவரை சரமாரியாக குத்தினர்.

இதனால் நிலை தடுமாறி இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த தினேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த இளைஞன் பரிதாபமாக இறந்தான்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அருகே உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட, முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட தினேஷ்க்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் கள்ள தொடர்பு இருந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு ஏற்கனவே காவல் நிலையத்தில் உள்ள நிலையில், தன் மனைவியுடன் தினேஷ் தொடர்ந்து பழகி வந்ததால் ஆத்திரமடைந்த கணவர் தனது நண்பருடன் சேர்ந்துகொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், கொலையாளிகள் இருவருரையும் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *