திருமண ஆசைக்காட்டி இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்..!

இளம்பெண் ஒருவர் இளைஞரை மயக்கி திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணமோசடி செய்து பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வளையமாதவி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(35). இவர் தங்க வைர நகைகளை ஏலத்தில் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். பின்னர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, அதைவிட்டு வேறு வேலைக்கு வெளிநாடு செல்ல முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில், பாலமுருகனின் பெற்றோர் அவருக்கு பெண் பார்த்து வந்த நிலையில், அவரும் தமிழ் மேட்ரிமோனி வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, பாலமுருகனின் ப்ரொபலை பார்த்த சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், உங்களை பிடித்திருக்கிறது, பேசலாமா என பாலமுருகனின் செல் நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

பாலமுருகனும், சரி, என்று பேச ஆரம்பித்த நிலையில், சித்ராவின் பேச்சில் மயங்கிய பாலமுருகன் அவரை திருமணம் செய்யும் முடிவுக்கு வந்தார்.

இந்நிலையில், சித்ரா தனது குடும்ப கஷ்டங்களை சொல்லி, பாலமுருகனிடம் ஏமாற்றி அடிக்கடி பணம் கேட்க ஆரம்பித்துள்ளார்.

பாலமுருகனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, ஊட்டி,சென்னை, கொடைக்கானல், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு அலுவலக ஊழியர்களுடன்பயிற்சிக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்று விடுவார். அதனால் என்னை கோவைக்கு வர வேண்டாம் என்பார்.

அந்த நாள்களில் அவர் கரூர் சிவக்கொழுந்து, பல்லடம் ஆனந்த், ஈரோடு குணசேகர்,கோவை ஸ்ரீதர் திருப்பதி, கணபதி உள்ளிட்ட 17 பேருடன் உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளார்.

இந்த விடயம், பின்னாட்களில் பாலமுருகனுக்கு தெரியவர, இதுகுறித்து சித்ராவிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, ஆமாம்… நான் ஒரு விலைமாதுதான். நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ. உன்னால் ஒரு மயிரும் ….. முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அழுகை, குடும்ப கஷ்டம் என்ற நடிப்பை நம்பி ஏமாந்து வீட்டு உபயோகப் பொருள்களில் இருந்து தங்கம்,வைர நகைகள் என இதுவரை 35 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், அவர் அடகு வைத்திருந்த நகைகளைக்கூட மீட்டுக் கொடுத்ததாகவும் பாலமுருகன் பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை போலவே பலரிடம் அவர் திருமணம் செய்வதாகக்கூறி 85 லட்சம் வரை பணம் வாங்கி ஏமாற்றியிருக்கிறார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புகாரை பெற்ற பொலிசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், பல மாதங்கள் கழித்து, சேலம் பொலிசார் திடீரென்று பாலமுருகனிடம் விசாரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறது. எங்கே விசாரணை என்ற பெயரில் அழைத்து, தன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தலைமறைவாகியுள்ளார் பாலமுருகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *