திருமண நேரத்தில் மணமகனின் ஆச்சரிய செயல்..

இந்தியாவில் வரதட்சணை வாங்க மணமகன் மறுத்த நிலையில் அவருக்கு 1000 புத்தகங்களை மணமகள் வீட்டார் பரிசாக கொடுத்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சூர்யகந்தா பரிக் (30). இவர் ஆங்கில ஆசிரியர் ஆவார்.

பொதுவாக இந்தியாவில் திருமணத்தின் போது மணமகனுக்கு பணம், நகைகள் அல்லது பொருட்களை மணப்பெண் வீட்டார் வரதட்சணையாக வழங்குவார்.

ஆனால் தனக்கு எந்தவொரு வரதட்சணையும் வேண்டாம் என சூர்யகந்தா மணப்பெண் வீட்டாரிடம் கூறிவிட்டார்.

அவரின் உயர்ந்த கொள்கையை அவமதிக்க விரும்பாத மணப்பெண் வீட்டார் அவரின் நல்ல குணத்தை பாராட்டும் வகையில் ஒரு பரிசை கொடுக்க நினைத்தனர்.

அதன்படி புத்தகங்களை அதிகம் விரும்பி படிக்கும் பழக்கம் கொண்ட சூர்யகந்தாவுக்கு 1000 புத்தகங்களை மணப்பெண் வீட்டார் வழங்கினார்கள்.

இதன்பின்னர் அவர்களின் திருமணம் நடைபெற்றது.

இது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இது குறித்து மணப்பெண்ணான பிரியங்கா கூறுகையில், நானும் புத்தகங்களை படிக்கும் பழக்கம் கொண்டவள்.

எனக்கும் வரதட்சணை என்றாலே பிடிக்காது, என் கணவரும் அதே போல இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *