திருமாவளவன் மீது பாய்ந்த வழக்கு!!

இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் லட்சகணக்கில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவாக வருட வருடம் மே மாதம் 18 ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது

கடந்த மே மாதம் 18 ஆம் நடைபெற்ற சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார் அப்போது தேச தந்தை மகாத்மா காந்தி அவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு தமிழகத்தில் பல அரசியல் கட்சி தலைவர்களும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் இந்து மக்கள் முன்னணி தலைவர் வி.ஜே. நாராயணன் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார் அளித்தார். இதனையடுத்து அசோக் நகர் காவல் துறை திருமாவளவன் மீது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *