தில்ருக்ஷியிடம் வாக்குமூலம் பெறப்படும்!

இலஞ்ச ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் தொலைப்பேசி உரையாடலில் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

தில்ருக்ஷி டயஸ் இலஞ்ச ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளராக செயற்பட்ட காலப்பகுதியில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைப்பேசி உரையாடல் ஒன்றை நிஷங்க சேனாதிபதி தனது பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார்.

அந்த உரையாடலில், அவன் கார்ட் வழக்கு அரசியல் நோக்கத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கு என்றும், அதில் கோட்டாபயவை இணைத்தது கவலைக்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *