தேசிய வலுதூக்குதல் – சென்னை வீரர்-வீராங்கனைகளுக்கு 5 பதக்கம்

தேசிய சப்-ஜூனியர் வலூதூக்குதல் சாம்பியன் சிப் போட்டியில் சென்னை வீரர்-வீராங்கனைகள் 5 பதக்கங்களை வென்றுள்ளனர்.

சென்னை:

இந்திய வலுதூக்கும் சம்மேளனம் சார்பில் தேசிய சப்-ஜூனியர் வலுதூக்குதல் சாம்பியன் சிப் போட்டி ஜாம்செட்பூரில் நடந்தது. இதில் பங்கேற்ற சென்னை வீரர்-வீராங்கனைகள் 5 பேருக்கு பதக்கம் கிடைத்தது.

72 கிலோ பிரிவில் வீர லட்சுமிக்கு 2 தங்க பதக்கமும், 84 கிலோவுக்கும் மேற்பட்ட பிரிவில் பவித்ராவுக்கு ஒரு தங்க பதக்கமும் கிடைத்தது. 120 கிலோ பிரிவில் ஷியாம் சுந்தர் வெள்ளிப் பதக்கமும், 63 கிலோ பிரிவில் மேகலட்சுமி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *