தேனி தீ விபத்து இயற்கையான சம்பவமா? நடிகர் சத்யராஜ்

ஆசிரியர் – Editor II

நடிகர் சத்யராஜ், தேனி தீ விபத்து இயற்கையானதா அல்லது செயற்கையானதா என்பதை அரசு ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் இந்த தீ விபத்து குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து மனதிற்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளை, இதுபோன்ற விடயங்களில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என நம்புகிறேன். இனிமேலாவது இது போன்ற விபத்துகள் தடுக்கப்பட வேண்டும். இந்த விபத்து இயற்கையானதா, இல்லை செயற்கையானதா என்பதையும் ஆராய வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Loading...