தேர்தல் பகிஸ்கரிப்பே எமது கட்சி முடிவு

இந்தத் தேர்தல் எங்களுடையது இல்லை. எனவே இத் தேர்தலை பகிஸ்கரிப்பதே எமது கட்சியின் முடிவாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இன்று (09) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போது இதனை அறிவித்தார்.

மேலும்,

பகிஸ்கரிப்பு என்ற முடிவு சிங்கள வேட்பாளர்கள் இடையில் வெற்றி கிடையாது என்ற நிலையை உருவாக்கக் கூடும்.

இராணுவத்தினரை, முப்படையினரை, போர் வீரர்களை நீதிமன்றில் நிறுத்தத் தயாரில்லை. அவர்களது கௌரவத்தை பாதுகாப்போம் என்று ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவாகக் கூறிவிட்டனர்.நாம் பகிஸ்கரிப்பதால் கோத்தாபய வெற்றி பெறுவார் எனம் கூறுபவர்கள், மஹிந்த – சரத் போட்டி வந்த போது சரத்தை ஆதரிக்கச் சொன்னார்கள். உண்மையில் மஹிந்த உத்தரவிட்டவரே தவிர போரை நடத்தி முடித்தது சரத். இனவழிப்பு இரத்தம் கைகளில் படிந்திருந்தவரை ஆதரித்தது பிழையில்லை. ஆனால் நாம் கோத்தாபயவை வெற்றி பெறப் பகிஸ்கரிப்பதாகச் சொல்கின்றனர்.

நாங்கள் கோத்தாவை வெல்ல வைக்க முயற்சிப்பதாக சொல்பவர்கள் கோத்தாவிற்குக் ஏனைய வேட்பாளர்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று சொல்ல வேண்டும்.

தமிழ் மக்களுக்கு உண்மையை சொல்ல கடமை எமக்கு உண்டு. மக்கள் தெரிந்து முடிவெடுக்க வேண்டும். என்னடாப்பா யாரும் எங்களுக்கு ஒன்றும் சொல்லவ இல்லை என்று நாளை மக்கள் கேட்கக் கூடாது.

தமிழ் மக்களின் வாக்குகள் தேவையென்றால், எமது முடிவில் மாற்றம் செய்ய வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு அடிப்படையாக தேவைப்படும் தீர்வு உட்பட பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இணங்க வேண்டும். வல்லரசுகளுக்கு மாற்றம் தேவையென்றால் எம்மோடு பேசுவார்கள். எமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் நாங்கள் வாக்களிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *