தேள் விஷத்தில் காசநோய்க்கு மருந்து! இந்திய விஞ்ஞானிகள் முக்கிய பங்கு!

மெக்சிகோ சிட்டி ,ஜூன். 13 -தேளின் விஷத்திலிருந்து காச நோய்க்கு மருந்தை  அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விஞ்ஞானிகள் குழுவில் இடம் இந்த ஆய்வில் இரு இந்திய விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் மெக்சிகோ விஞ்ஞானிகள் இணைந்து தேளின் விஷத்திலிருந்து காச நோய்க்கு காரணமான பாக்டீரியா -க்களை அழிக்கும் மருந்தினை கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த விஞ்ஞானிகள் குழுவினர் தேள், பாம்பு , நத்தை உள்ளிட்ட விஷ தன்மை கொண்ட உயிரினங்களிலிருந்து மருந்து கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு வந்தனர் .

உலகின் மிக விலை உயர்ந்த பொருட்களை நிமிஷமும் ஒன்று. இதனை ஒரு கேலன் அமெரிக்கா அளவு மதிப்பு (3.78 லிட்டர் சமம்) தயாரிக்க 39 மில்லியன் டாலர்கள் ஆகும்.

டிப்ளோசென்டிரஸ் மெலிசி என்ற அரிய வகை தேளைக் கொண்டு  இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட து. பொதுவாக இவ்வகை தேள் இனங்கள் மழை காலங்கள் மற்றும் வறட்சியான காலங்களில் மட்டுமே காணப்படும்.

விஞ்ஞானி பொலானி தலைமையிலான குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக விஷ காரணிகளிலிருந்து மருந்து தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்கு முன் இவர்கள் அன்டிபையோட்டிக் பூச்சிக்கொல்லிகள் மற்றும் மலேரியாவுக்கு எதிரான மருந்துகளை சிலந்தியின் விஷத்தை கண்டுபிடித்துள்ளனர்

இரு விதமான வேதியப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.  இதில் 0.5 மைக்ரோ லிட்டர் விஷத்தை எடுத்து  கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஷிப்தாஸ் பானர்ஜி மற்றும் ஞானமணி ஏழுமலை ஆகிய இரு இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

வட்ட வடிவமான துகள்கள் ஆன்டி-மைக்ரோப்பியல் தன்மை கொண்டு இருப்பதை இவர்கள் கண்டறிந்தனர்.  இவற்றில் காச நோய்க்கு காரணமான பற்றி பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய தன்மை உள்ளது தெரிய வந்தது.   இதில்  ஞானமணி காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் புதுச்சேரியில் பிஎச்டி படித்தவர். தற்போது ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் பணிபுரிகிறார்  என்பது குறிப்பிட தக்கது

The post தேள் விஷத்தில் காசநோய்க்கு மருந்து! இந்திய விஞ்ஞானிகள் முக்கிய பங்கு! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *