நகைகளை யாரும் மீட்க வரவில்லையா? ரோஸ்மா தரப்பு மறுப்பு!

Please log in or register to like posts.
News

கோலாலம்பூர், செப்.14- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு சொந்தமான வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விலையுயர்ந்த, ஆடம்பரப் பொருட்களை மீட்க இதுவரை யாரும் வரவில்லை என்று போலீசார் கூறியுள்ளதை, டத்தீன்ஶ்ரீ ரோஸ்மாவின் வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர்.

நேற்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டான்ஶ்ரீ நோர் ரஷீட் இப்ராஹிம், நஜிப்பின் வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரிம.114 மில்லியன் ரொக்கப் பணம் மற்றும் இதர சொத்துகளை மீட்க இதுவரை யாரும் முன்வரவில்லை என்று கூறினார்.

“போலீஸ் படைத் துணைத் தலைவர் கூறியதில் உண்மையில்லை. ரோஸ்மா மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்குச் சொந்தமான பொருட்களை மீட்பதற்காக நாங்கள் போலீஸ் துறையிடம் அதிகாரப்பூர்வ வேண்டுகோள் கடிதத்தை சமர்ப்பித்தோம்.

“ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பிலான விசாரணை நடந்துக் கொண்டிருப்பதால், அவற்றை திருப்பித் தர முடியாது என்று போலீஸ் தரப்பினர் மறுத்து விட்டனர்” என்று ரோஸ்மாவின் வழக்கறிஞர்களில் ஒருவரான இஸ்கண்டார் ஷா இப்ராஹிம் சொன்னார்.

இதனிடையில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து போலீசார் இதுவரை ரோஸ்மாவிடம் எவ்வித வாக்குமூலமும் பெறவில்லை என்பதையும் இஸ்கண்டார் சுட்டிக் காட்டினார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீட்பதற்காக கூட்டரசு பிரதேச சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பணம் பெறுவதை தடுக்கும் பிரிவின் தலைவர் எஸ்.ஏ.சி காலீல் அஸ்லான் சிக்கிற்கு கடந்த ஜூலை மாதம் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் ரோஸ்மாவின் தரப்பில் தாங்கள் போலீசாருக்கு வேண்டுகோள் கடிதங்களை அனுப்பியதற்கான ஆதரங்களை இஸ்கண்டார் மலேசியாகினியிடம் காண்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதால், அவற்றை திருப்பி தர முடியாது என்று கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதியன்று ரோஸ்மாவின் வழக்கறிஞர்களுக்கு காலீல் அஸ்லான் பதில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நகைகளை யாரும் மீட்க வரவில்லையா? ரோஸ்மா தரப்பு மறுப்பு! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *