நடிகையின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன்…

பிரபல திரைப்பட நடிகையின் அறைக்குள் புகுந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி துப்பாக்கி முனையில் மிரடிய நபர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பிரபல போஸ்புரி நடிகையான ரிது சிங், தற்போது துலாரி பிடியா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக 70 கொண்ட குழு மும்பையிலிருந்து உத்திரப்பிரதே மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்திற்கு சென்றுள்ளது.

அங்கிருக்கும் நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினருடன் ரிது சிங் தங்கியுள்ளார். அப்போது திடீரென்று ஹோட்டலுக்கு வந்த இளைஞர் ஒருவர், நடிகை ரிது சிங்கின் அறை எங்கிருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.

அதன் பின் 11 மணியளவில், யாருக்கும் தெரியாமல் நடிகையின் அறைக்குள் நுழைந்த இளைஞன், துப்பாக்கியை காட்டி மிரட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி நடிகையை மிரட்டியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சியில் அலறியுள்ளார். இவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு வெளியில் இருந்த அசோக் என்ற வாலிபர் அறைக்குள் ஓடி வந்துள்ளார்.

இதைக் கண்ட அந்த இளைஞர் துப்பாக்கியால் அசோக்கை சுட, அவர் கையில் பலத்த காயத்துடன் கீழே விழுந்துள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதை அடுத்து ஹோட்டல் ஊழியர்கள் நடிகையின் அறைக்கு ஓடி வந்தனர். இது தொடர்பாக பொலிசாருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்து கிடந்த அசோக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் பொலிசார் அங்கு வந்து அந்த வாலிபரிடம் அறையை விட்டு வெளியே வருமாறு கூறினர். ஆனால் அவர், பொலிசாரை நோக்கியும் சுட்டார். இதில் பொலிசார் ஒருவர் நூலிழையில் தப்பினார்.

சுமார் ஒன்றரை நேர போராட்டத்துக்குப் பின், துப்பாக்கியால் சுட்ட இளைஞரை பொலிசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அருகி லுள்ள ஜான்பூரைச் சேர்ந்த பங்கஜ் என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தால் நடிகை ரிது சிங் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், படக்குழு மீண்டும் மும்பைக்கு திரும்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *