நடிகை ரோஜாவுடன் பூசாரி எடுத்த செல்பியால் வந்த பிரச்சனை…

பிரபல திரைப்பட நடிகையான ரோஜாவுடன் பூசாரி எடுத்த செல்பி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் திரைப்பட நடிகையுமான ரோஜா வெற்றி பெற்ற நிலையில், அவர் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் பகுதியில் இருக்கும் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்துள்ளார்.

இந்த கோவில் மிகவும் பிரபலமான ஒன்று, இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களிலிருந்தும் அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அந்தவகையில் நடிகை ரோஜா சிவன்மலை கோவிலுக்கு வந்த போது அறநிலையத்துறை ஊழியர் ஒருவர் செல்பி எடுத்துள்ளார்.

அப்போது அவர், தன்னுடைய பணியை மறந்து கொடிமரம் பகுதியில் ராஜகோபுரம் நுழைவாயிலை அடைத்து நின்றபடி செல்பி எடுத்ததால், அங்கிருந்த பக்தர்கள் எரிச்சலடைத்ததாக கூறி பிரச்சனை கிளம்பியுள்ளது.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *